உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தினமும் தாமதமாக வந்ததால், பள்ளி முதல்வர் அடித்துத் தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியின் முதல்வர் கஞ்சன் சவுத்ரியை கண்டித்துள்ளார்.
இதனால் பள்ளி முதல்வருக்கும் அந்த ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பலமுறை கண்டித்தும் தொடர்ந்து தினமும் தாமதமாகவே வந்த ஆசிரியையை, திடீரென்று பள்ளி முதல்வர் தாக்கினார். உடனே அந்த ஆசிரியை தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அப்போது பள்ளி முதல்வர் அவருடைய ஆடையை பிடித்து இழுத்து அடித்துள்ளார். சக ஆசிரியர்கள் இருவரையும் பிரித்து விலக்கி விட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை : அடித்து தள்ளிய பள்ளி முதல்வர்
