புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்தவர் தமிழ் வேந்தன், இவர் புதுச்சேரி மாநில அதிமுக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார்…
இவர் தனது பிறந்த நாளை தொண்டர்கள் மத்தியில் கேக்கு வெட்டி தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தமிழ் வேந்தனுக்கு ஆளுயுர மாலை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது வீட்டின் அருகே சாமியானா போட்டு அமைக்கப்பட்டு இருந்த விருபந்தலில் விருந்து உபசரிக்க நிகழ்வு நடைபெற்றது.
இதில் நல்லி எலும்பு குழம்பு,மட்டன் சுக்கா, மணக்க மணக்க நெய் சோறு, சுட சுட ஆவி பறக்கும் மட்டன் பிரியாணி, ஆயிரம் முட்டை என தடபுடல் கறி விருந்து வைத்து பரிமாறினார்.

மேலும் சாதம், ரசம் கூட்டு பொரியல் என விதவிதமான உணவுகளை வைத்து பறிமாறினார். சாப்பிட வந்தவர்கள் எதை சாப்பிடுவது என்று தெரியாமல் திகைத்துப் போய் வயிறார சாப்பிட்டு தமிழ் வேந்தனை மனதார வாழ்த்தி சென்றனர்.