அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் கடும் சண்டை நிலவி வரும் இந்த வேலையில் ஓபிஎஸ்- இன் இளைய மகன் ஜெயபிரதீப் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது தான் ஹைலைட்டான விஷயமே.

அப்படி என்ன ஹைலைட்டான விஷயத்தை அறிக்கையாக ஓபிஎஸ் -ன் இளைய மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.., நீதி வேண்டும் என்ற தலைப்போடு.., எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடன் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் -ன் இளைய மகன் ஜெயபிரதீப் அறிக்கையை வெளியிட்டு இருப்பது இபிஎஸ் வட்டாரத்தில், பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் கிளப்பி இருக்கின்றது.














; ?>)
; ?>)
; ?>)