செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தோழி விடுதியினை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் / பொது கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் பொதுகணக்கு குழுவினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில், சட்டபேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், பொதுகணக்கு குழு சட்டமன்ற உறுப்பினர்கள்- கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருபோரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், இணைச்செயலாளர் சட்டமன்ற பேரவை (செயலகம்) பா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.கணேஷ் குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.