• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…

ByP.Thangapandi

Sep 2, 2024

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை என மத்திய அரசு வஞ்சித்து, மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. கொதித்து எழ வேண்டிய மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்..,

மத்தியில் உள்ள அரசும் மாநில அரசும் மக்கள் மீது அக்கறை இல்லாமல், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை கூட செய்ய தவறி இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் இன்று பள்ளி கல்வித்துறைக்கு நிதி வழங்குவதில் அலச்சியம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று தமிழகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார், மாநில அரசு அழுத்தம் கொடுத்து அந்த நிதியை பெற வேண்டும் என வலியுறுத்தியும் கூட இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து புலம்பி வருகிறாரே தவிற இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியை காணவில்லை.

முதல் தவணையாக 523 கோடி ஜூன் மாதமே ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும், தற்போது செப்டம்பர் 2ம் தேதி இதுவரை அந்த நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை., புதிய தேசிய கல்விக்கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், பிஎம்ஜி பள்ளிகள் திட்டத்தில் இணைந்தால் தான் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு நிதி வழங்க முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நிபந்தனை விதிப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இப்படி இரண்டு பேரும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு குற்றம் சாட்டுவதால் என்ன பலன் ஏற்பட போகிறது. இந்த நிலையில் தான் பிஎம்ஜி திட்டத்தில் இணைந்தற்கான ஒப்பந்ததில் கையெழுத்திடுவதாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு சொல்லியுள்ளனர் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் சொல்கிறது.

அப்படியானால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொல்லும் நீழி கண்ணீர் யாரை ஏமாற்றுவதற்காக., ஏன் இந்த இரட்டை வேடம் ஏன் இந்த நீர் கண்ணீர் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக இருக்கிறது.

மத்திய அரசும் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது, மாநில அரசும் அந்த நிதியை பெற்று தராமல் வஞ்சிப்பது நியாயம் தானா என தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு திமுக அரசு வெறும் முந்திரி பக்கோடாவை சாப்பிட்டு விட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களது கடமையை ஆற்றுகின்றார்களா இல்லையா என தமிழ்நாட்டு மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கல்விக்கும் நிதி இல்லை, வெள்ள நிவாரணத்திற்கும் நிதி இல்லை, மெட்ரோ திட்டத்திற்கும் நிதி இல்லை, பட்ஜெட்டிலும் நிதி இல்லை தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது ஆகவே 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் நிதியை வாரி வழங்கும் மத்திய அரசு தமிழ்நாட்டை மதிக்கவே இல்லை, இந்திய வரைபடத்தில் தான் தமிழ்நாடு இருக்கிறதா என தமிழ்நாட்டு மக்கள் ஐய்யம் கொள்கிற வகையில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.

ஏற்கனவே மாநில அரசின் நிர்வாகத்தில் நிலைகுலைந்து போய் இருக்கிற மக்கள் மீது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இன்று மாநில அரசு ஒரு புறம் மக்களை துன்புறுத்தி வருகிறது, மத்திய அரசும் ஒரு புறத்திலே துன்புறுத்தி வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்த மக்களை இணைப்பது பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம் என்று சொன்னாலும் கூட இரயில்வே பாதைகள் தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இணைக்கின்ற இணைப்பு பாலமாக அமைகிறது ஆனால் மூன்றாவதாக ஆட்சி அமைத்த பின் அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் எதையும், எதுவும் அறிவிக்காமல் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக தமிழ்நாட்டு மக்கள் கோந்தளித்து போய் இருக்கிறார்கள்., மத்திய அரசு இன்று இரயில்வே திட்டங்களில் தமிழர்களின் முதுகில் குத்தியிருக்கிறது என்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

இப்படி பல திட்டங்களுக்கு நிதி தரும் அளவை குறைத்துள்ளது மத்திய அரசு, கொதித்து எழவேண்டிய மாநில அரசு தூங்கி கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கோர்ட் சூட் போட்ட ஒட்டடை குச்சி போல முதலமைச்சர் 900 கோடி நிதி திரட்டி இருக்கிறேன் என செய்தி வெளியிடுகிறார்., இங்கே அவரது திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு 908 கோடி அமலாக்கதுறை அபராதம் விதித்துள்ளனர்., இதற்கு தமிழ்நாட்டு மக்கள் விளக்கம் கேட்டால் முதலமைச்சர் திமுக முப்பெரும் விழாவில் அபராதம் விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரச்சகனுக்கு கலைஞர் விருதை அளித்திருக்கிறார் இது எவ்வளவு கேளி கூத்தாக இருக்கிறது.

ஊழலை ஊக்குவிப்பதற்காக விருதா எதற்காக விருது என தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இணைக்கும் இரயில்வே திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் அடையாளமாக ஒதுக்கி இருக்கிறோம் என வாய் கூசாமல் சொல்வது மக்களுக்கு செய்கிற துரோகம். தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் வரி கட்டினால் 29 பைசா தான் கொடுக்கிறார்கள் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமாக 3 ரூபாய் கொடுக்கிறார்கள்., ஆகவே வந்தே பாரத் என்று விழா எடுப்பது இதையெல்லாம் திசை திருப்பும், மடை மாற்றும் நிகழ்வாக இருக்கிறது.

ஆகவே வளர்ச்சி நிதி என்றாலும், வறட்சி நிதி என்றாலும் தமிழ்நாடு என்று சொன்னால் ஓர வஞ்சனையாக ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு. அறிவிக்கப்பட்ட மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி மற்றும் எப்போது துவங்கும் என கேட்டால் கர்நாடகவில் துவங்கி வைக்கிறார்கள், தமிழகத்தில் மூடு விழா காண்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நிதி இல்லை, நீதிக்கு புறம்பாக, மக்களாட்சிக்கு புறம்பாக, மக்கள் விரோத நடவடிக்கையாக தமிழ்நாட்டு மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.

மாநில அரசும், மத்திய அரசும் இப்படி வஞ்சிப்பது நியாயம் தானா என அறிக்கை, போராட்டங்கள் மூலமாக எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்து வருகிறார் என பேசினார்.