டெல்டா விவசாயிகளை விவசாயிகளை கொச்சைப்படுத்து விதமாக நடந்து கொள்ளும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரயில் நிலையங்களை பார்வையிட்டு நெல் நிலுவையில் இல்லை என விவசாயிகளை கொச்சைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கிறேன் பி ஆர் பாண்டியன்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் ஒரத்தநாடு பகுதிகளில் வடக்கூர், செல்லம்பட்டி, , பின்னையூர், நெடுவாக்கோட்டை,
கண்ணந்தங்குடி, கக்கரை ஒரத்தநாடு புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஒரத்தநாட்டில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை தீவிர அடைந்திருக்கிறது. கொள்முததை தீவிரப்படுத்த பல்வேறு அவசர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இருப்பினும் ஒரத்தநாடு புதூர், பின்னையூர், கண்ணத்தங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 2 லட்சத்திற்கு மேல் நெல் மூட்டைகள் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
இதுபோல காவிரி டெல்டாவில் பல்வேறு மாவட்டங்களிலும் நெல் இருப்பில் உள்ளது.சில கிராமங்களில் கொள்முதல் நிறைவு பெற்றுள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள கொள்முதல் பணியாளர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்களைக் கொண்டு தேவையான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலை தீவிர படுத்த வேண்டுகிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தஞ்சையில் ரயில் வேகன்களில் நெல் மூட்டை ஏற்றுவதை பார்வையிட்டு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் இருப்பு இல்லை என தவறான தகவலை கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். வீதியில் கடந்த கதறுகிற விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கு பதிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்காமலேயே உண்மையை மூடி மறைக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது தான் அரசியலில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். துவங்கும் போதே உண்மைக்கு புறம்பாக பேசி விவசாயிகளுடைய தவறான பார்வையை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
கொள்முதலை தீவிரப்படுத்துவதற்கு என்னென்ன வகையில் செயல்பட முடியுமோ, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுகிறேன்.
மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மாவட்டத் தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், செயலாளர் ஒரத்தநாடு பிரபாகரன்,மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், கோவிலூர் சதீஷ், ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், ரெத்தினவேலு உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் பங்கு கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)