• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ByA.Tamilselvan

Oct 9, 2022

கச்சதீவு அருகே படகுகளை சேதப்படுத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே இன்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த பகுதிக்கு ரோந்து வந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை விரட்டினர். மேலும் சக்தி என்பவரது விசைப்படகு மீது தங்களது படகை மோத விட்டு சேதப்படுத்தினர்.
சேதமான விசைப்படகில் கரை திரும்பிய மீனவர்கள் மீனவளத்துறை அலுவலகம் சென்று இலங்கை கடற்படையின் அடாவடி குறித்து புகார்செய்தனர். அவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.