கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் “நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என வீரவசனம் பேசினார்.
தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வசனத்தை இப்போது பயன்படுத்துவாரா? அல்லது பா.ஜ.க.வுடன் இணைந்து நாடகம் ஆடுகிறாரா? என்று தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணையை கேட்டாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.- சபாநாயகர் அப்பாவு.




