உசிலம்பட்டி பேரையூர் சாலையில் அமைந்துள்ள புனித பாத்திமா ஆண்டு பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்தோடு துவங்கியது,

இந்நிலையில் இன்று கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு சான்று பகரும் வகையில் நற்கருணை பவனியானது ஆர்சி சிறுமலர் கிளை தொடக்கப்பள்ளியில் இருந்து துவங்கி டிபி ரோடு வழியாக தேவர் சிலை வரை சென்று குழந்தை ஏசு ஆலயத்தில் நிறைவடைந்தது.,

அதனை தொடர்ந்து கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் ஒன்றிணைந்து திருப்பலி நிறைவேற்றி அந்நாளை சிறப்பு செய்தார்கள். திருப்பலியை உசிலம்பட்டி பங்கில் உள்ள பாடகர் குழுவினர், சின்னப்பர் அன்பியம் மற்றும் கட்டகருப்பன்பட்டி இறைமக்கள் சிறப்பு செய்தனர்.,
திருப்பலி நிறைவில் மக்களுக்கு உறவு விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பணி . இக்னேசியஸ் ஸ்டாலின், அருள்சகோதரிகள், அன்பிய மற்றும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இறைமக்கள் இணைந்து செய்திருந்தனர்.,