• Fri. Apr 26th, 2024

வேற்றுகிரவாசிகளோடு ஹலோ சொல்ல பூமியிலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட சிக்னல்..

ByA.Tamilselvan

Apr 20, 2022

பூமியில் இருந்து மனிதர்களின் விவரங்கள் மற்றும் சூரிய குடும்பத்தின் விவரங்கள் அடங்கிய சிக்னல் ஒன்று வானத்தை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
நம்மை சுற்றி எல்லையற்று விரிந்து பரந்துள்ளது பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் வாழ்கிறோமா அல்லது வேற்றுகிரவாசிகள் இருக்கிறார்களா. என்றகேள்வி நமக்கு உண்டு.
மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. மனிதன் நிலவில் கால் வைக்க தொடங்கியது முதல் வேற்றுகிரகவாசிகளை தேடும் முயற்சி தொடங்கியது .
அந்த வகையில்தான் கடந்த 1974ம் ஆண்டு பூமியில் இருந்து விண்வெளிக்கு ரேடியோ மெசேஜ் அனுப்பப்பட்டது. ரேடியோ அலைகள் பிரபஞ்சம் முழுக்க இருக்கிறது என்பதாலும், இதை எளிதாக கிரகிக்க முடியும் என்பதாலும் அதில் மெசேஜ் அனுப்பப்பட்டது. விண்வெளிக்கு சிக்னல் போர்டோ ரிக்கோவில் இருந்து இந்த ரேடியோ சிக்னல் சக்தி வாய்ந்த Arecibo telescope மூலம் அனுப்பப்பட்டது. அதில் மனிதர்களின் டிஎன்ஏ விவரங்கள், கெமிக்கல் விவரங்கள், பூமி எப்படிப்பட்டது, அதில் என்ன வாயுக்கள் உள்ளன என்று அடிப்படை விவரங்களோடு தகவல் அனுப்பப்பட்டது. வேற்று உலகில் உயிரினங்கள் இருந்து, அது நம்மை புரிந்து கொள்ளும் அளவிற்கு சக்தி வாய்ந்து இருந்தால் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற திட்டத்தில் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகள் ஆகியும் எந்த ரிப்ளேவும் வரவில்லை வேற்றுகிரகவாசிகள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Jet Propulsion Laboratoryயை சேர்ந்த ஜொனாதன் ஜியான் என்ற ஆராய்ச்சியாளர் சீனாவின் Aperture Spherical radio Telescope என்ற மிகப்பெரிய 500 மீட்டர் தொலைநிக்கோ உதவியுடன் நம் சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வெளியை நோக்கி இந்த சிக்னலை அனுப்பி உள்ளார். பால்வெளியில் உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதப்படும் பகுதியை நோக்கி இந்த மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த ரேடியோ சிக்னலில் மனிதர்களின் டிஎன்ஏ அமைப்பு, பூமி எங்கே இருக்கிறது என்ற விவரம், சூரிய குடும்ப விவரம் என பல தகவல்கள் அடங்கி உள்ளன.
இந்த சிக்னல் விண்வெளியை நோக்கி செல்லும் வழியில் வேற்றுகிரகவாசிகள் இருந்தால் அவர்கள் நமக்கு ஒரு ஹெலோ சொல்வார்களா? காத்திருப்போம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *