• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஹனு-மேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது படக் குழு அறிவிப்பு

Byதன பாலன்

Apr 18, 2023

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்திருக்கிறது. படப்பிடிப்பின் இறுதி நாளன்று பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளக் காணொளியை படக் குழுவினர் வெளியிட்டனர்.இந்த திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் 135 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி பெரும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அனுமன் ஜெயந்தி தினத்தன்று வெளியிடப்பட்ட அனுமன் சாலிசாவின் காணொளி, இந்தியா முழுவதும் எதிர்பாராத அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, கன்னடம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்க, குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். அஸ்ரின் ரெட்டி மற்றும் வெங்கட் குமார் ஜெட்டி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றியிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.