• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோரோன இரண்டாம் அலை கோவையை மிகதீவிரமா தாகியது. தற்போது மீண்டும் கோவையை தாக்க ஆரம்பித்து உள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர்.

இந்த நிலையில், அவர்களில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நேற்று மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கேரள மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுமட்டுமின்றி கோவையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டுகளில்‌ மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும்‌ அனுமதி மற்றும்‌ 50 சதவிகித கடைகள்‌ சுழற்சி முறையில்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. உழவர்‌ சந்தைகள்‌ சுழற்சி முறையில்‌ 50 சதவிகித கடைகளுடன்‌ இயங்க அனுமதிக்கப்படுள்ளது.

20 ஆம் தேதி முதல்‌ அனைத்து வணிக வளாகங்கள், துணிக்கடைகள்‌, நகை கடைகள்‌ மற்றும்‌ இதர கடைகளில்‌ பணிபுரியும்‌ பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல்‌ தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்‌ என அறிவுறு்தப்படுள்ளது.