மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்மாய் சாலையில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் முன்பாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் வைகோலால் செய்யப்பட்ட சொக்கப்பனையை கோயில் நிர்வாகி அருணாச்சலபாண்டியன் கொளுத்தினார். அப்போது தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது அந்த எரியும் நெருப்பில் சிவன் நடனம் ஆடுவது போல் காட்சி தெரிந்தது. இதை கண்ட பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்து வழிபட்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





