• Mon. May 6th, 2024

‘தி ரோடு’ திரை விமர்சனம்!

Byஜெ.துரை

Oct 7, 2023

அருண் வசீகரன் எழுதி இயக்கிய த்ரிஷா, ஷபீர் கல்லாரக்கல், சந்தோஷ் பிரதாப், வேல ராமமூர்த்தி, எம்.எஸ் பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோடு’.

இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் தம்பதி, கிரிமினல்களிடம் சிக்கி இறந்து விடுகின்றனர். ஆனால் அதை சாலை விபத்து என்று சொல்லி விடுகிறார்கள்.

படத்தின் ஹீரோயினான மீரா(த்ரிஷா) அவரின் மகன் சாலை வழியே ஒரு ட்ரிப் போகலாம் என கூற த்ரிஷா(மீரா) மறுக்கும் பட்சத்தில் தன் மகன் ஆசைக்காக மீராவின் கணவர் ஆனந்த்(சந்தோஷ் பிரதாப்) மகன் கவினை ட்ரிப் அழைத்து செல்ல சொல்கிறார். இந்த ட்ரிப்பில் சாலை விபத்தில் தன் குடும்பத்தாரை மீரா இழக்கிறார்.

அது சாலை விபத்து இல்ல திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதை மீரா தெரிந்து கொள்கிறார்.

இதற்கு கான்ஸ்டபிள் சுப்ரமணி(எம்.எஸ். பாஸ்கர் ) மற்றும் தோழி அனு(மியா ஜார்ஜ்) ஆகியோரின் உதவியுடன் தன் குடும்பத்தாரை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.

மறுபக்கம் மதுரை அருகே இருக்கும் கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியான மாயா(ஷபீர் )மீது ஆசைப்படும் ஒரு மாணவி அவர் மீது பாலியல் புகார் தெரிவிக்க அவர் அசிங்கப்படுகிறார்.

இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு கட்டத்தில் ஒன்றாகிறது என்பதை காட்டிய விதத்தில் நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் வசீகரன்.

விசாரணை நடக்கும் விதம் நம்மை கவர்கிறது. மீராவின் பாதுகாப்பு குறித்து நம்மை கவலைப்பட வைத்திருக்கிறார் அருண். ஆனால் வில்லனுக்காக நம்மை ஃபீல் பண்ண வைத்தது தான் சிறப்பு. ஒரு முக்கிய கதாபாத்திரம் மாறும் விதத்தை அழகாக காட்டியிருக்கிறார்கள்.

நெடுஞ்சாலையில் நடக்கும் குற்றங்களுக்கு பின்னால் இருக்கும் முக்கிய மூளை குறித்து தெரிய வந்ததும் த்ரில் போய்விடுகிறது.

நடிகை த்ரிஷாவின் நடிப்பு படத்தின் ஹைலைட். மொத்த படத்தையும் தாங்கி நடித்து மிரட்டுகிறார். அவரது அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் ஆகும் காட்சிகளும், கணவர் மற்றும் மகனை இழந்து விட்டு தவிக்கும் தவிப்பு என நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

அதே போல ஷபீர் நடிப்பும் சிறப்பு. கான்ஸ்டபிளாக வரும் எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மியா ஜார்ஜ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் பிரமாதம்.

சாம் சி.எஸ். இசை இனிமை மொத்தத்தில் தி ரோடு திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *