மதுரை சமயநல்லூர் அருகே கட்டபுளி நகர் என்னும் இடத்தில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் பிறை கட்டாகி விழுந்தது 15க்கு மேற்பட்டோர் காயம் சாலை நடுவே அரசு பேருந்து கவிழ்ந்த அவலம்.

மதுரையில் இருந்து பழனி சென்ற அரசு பேருந்து மதுரை சமயநல்லூர் அருகே கட்டபுலி நகர் என்னும் இடத்தில் சென்றபோது டிரைவர் பிரேக் பிடித்த போது பிரேக் கலன்று பின்புற டயர் இரண்டும் தனியாக சாலையில் ஓடியதால் பேருந்து வலது பக்கமாக திரும்பி நடு சாலையில் கவிழ்ந்தது பேருந்தில் இருந்த பயணிகள் 15க்கு மேற்பட்டோர் காயம் பட்டதாக கூறப்படுகிறது. 108 ஆம்புலன்ஸ் மூலம் காயப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பராமரிப்பு இல்லாத அரசு பேருந்துகளால் தொடர் விபத்து நடந்து வரும் நிலையில் மதுரையில் பிரேக் பிடிக்காததால் பின் பக்க.டயர்பிடிக்காத நிலையில் கழண்டு சாலையில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்பாக உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து டயர் வெடித்து எதிரே சென்ற கார்கள் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.





