• Fri. May 10th, 2024

“ரெய்டு” திரைவிமர்சனம்…

Byஜெ.துரை

Nov 13, 2023

எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில், எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே தயாரிப்பில் இயக்குனர் முத்தையா வசனம் எழுதி அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த திரைப்படம் ‘ரெய்டு’.

இத்திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா, அனந்திகா சனில்குமார், டேனியல் அன்னி,
ரிஷி ரித்விக், சவுந்தரராஜா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படம் கன்னட சினிமாவில் ஷிவ் ராஜ்குமார், தனஞ்சயா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘டகரு’ படத்தின் ரீமேக்காகும்.

நாயகன் விக்ரம் பிரபு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் பணியாற்றும் பகுதியில் உள்ள ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். இன்னொரு பக்கம் தாதாவாக இருக்கும் வேலு பிரபாகரன் மற்றும் அவரிடம் பணியாற்றி விலகி ரவுடிசம் செய்து வரும் ரிஷி மற்றும் சவுந்தரராஜாவிடம் விக்ரம் பிரபு மோதுகிறார்.

இதில் ரிஷியின் தம்பி டேனியலை விக்ரம் பிரபு அவமானப்படுத்தி என்கவுண்டர் செய்கிறார். இதனால் கோபம் அடையும் ரிஷி மற்றும் சவுந்தர ராஜா,விக்ரம் பிரபு மற்றும் அவரது காதலி ஶ்ரீ திவ்யாவை கொலை செய்து விடுகிறார்.

இதில் உயிர் தப்பிக்கும் விக்ரம் பிரபு,தன் காதலியை கொன்ற ரவுடி ரிஷி மற்றும் சவுந்தரராஜாவை பழி வாங்கினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக படம் முழுக்க வலம் வருகிறார். நாயகியாக வரும் ஶ்ரீ திவ்யாவுடன் காதல், பாடல் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்ந்து இருக்கிறார்.

ரிஷி வில்லன் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பிக்காக பழி வாங்க துடிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளார். கிளைமாக்ஸ் சண்டையில் வால்
சுற்றும் காட்சியில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.

இவருக்கு துணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் சவுந்தரராஜா. காதலிடம் காதலை சொல்லாமல் நடித்த காட்சிகள் அருமை. போலீஸ், ரவுடிசம், கொலை, என்கவுண்டர் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்தி

சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்டும் படி உள்ளது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கதிரவனின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்

மணிமாறன் படத்தொகுப்பு சிறப்பு மொத்தத்தில் ‘ரெய்டு’ திரைப்படம் த்ரில்லர் க்ரைம் சினிமா விரும்பிகளுக்கு தீபாவளி ட்ரிட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *