• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உண்மை சம்பவத்தின் பாதிப்பில் உருவானது பப்ளிக் படம்

சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் பப்ளிக். இதனை ரா.பரமன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். காளி வெங்கட், ரித்விகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமான் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இந்த படத்தின் கதை நிஜமானது. இது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்ற வாசகத்துடன் வெளியானது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.பரமன்கூறுகிறபோதுஅடிப்படையில் நான் ஒரு பத்திரிகையாளன். சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றியபோது தலைவர்கள், தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன்.

அப்போது தான் தலைவன், தொண்டன் இருவரின் மனநிலையையும் அறிய முடிந்தது. இதைதொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தொண்டர்களை சந்தித்து, அவர்களுடன் பேசியதிலிருந்து உருவானது தான் பப்ளிக்எந்த படத்தின் கதையும் முழுக்க முழுக்க கற்பனையாக இருக்கமுடியாது.சமூகத்திலிருக்கும் ஏதோ ஒரு விஷயத்தை எடுத்துதான், அதை கற்பனையாக மாற்றி எடுக்க இயலும்.

அப்படி இருக்கும்போது அரசியல் படம் என்று சொல்லிவிட்டு, இது முழுக்க முழுக்க கற்பனையே என்று கூறினால், அது மக்களை ஏமாற்றுவது போலாகிவிடும். அதனால்தான் இதனை நிஜமான கதை என்று விளம்பரம் செய்கிறோம், என்றார்.