மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டை ஊராட்சி நகரியில் தனியார் பிஸ்கட் கம்பெனி அருகில் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாமல் சொல்ல முடியாத துயரத்தில் நீண்ட நாள் இருந்து வந்தனர்

கழிவு நீர் கால்வாய் கட்டித்தரச் சொல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில்
நான்கு மாதங்களுக்கு முன்பாக சாக்கடை கழிவுநீர் கால்வாய்அமைக்க முடிவு செய்த அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்டி சென்றனர் ஆனால் முறையாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை பாதியிலேயே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற எந்த ஒரு வழியும் இல்லை இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது மிக ஆழமாக அமைக்கப்பட்ட சாக்கடையால் அதிக அளவில் தண்ணீர் தேங்கி சுகாதாரக் கேடு நிலவுகிறது

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகதிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மாறாக அப்படித்தான் இருக்கும் என்றும் புதிய ஊராட்சி மன்ற தலைவர் வந்தவுடன் உங்களுக்கு கால்வாய் அமைத்து தருவோம் என்று கூறியதால் இந்த பகுதி மக்கள் தாங்களாகவே மோட்டார் மூலம் சாக்கடை கால்வாயை எடுத்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விடுகின்றனர்
இதுகுறித்து அந்த பகுதியில் வருவோர் போவோர் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்த சாக்கடை தண்ணீரை வெளியேற்றுவதாக மிகுந்த கவலையில் உள்ளனர். அதிகளவிலான குடியிருப்பு வாசிகள் சிறு குழந்தைகள் மற்றும் கம்பெனியில் வேலை பார்க்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த வேதனையில் உள்ளனர்

இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரணை செய்து சாக்கடை கால்வாய் முறையாக அமைத்து கழிவுநீர் வெளியேற்ற வழிவகை செய்ய வேண்டும். மேலும் எந்த ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்தாலும் வெளியேறும் வகையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கால்வாயில் இருபுறமும் முட்டுச்சந்தில் கால்வாய் முட்டி நிற்பதால் கழிவுநீர் வெளியேறி செல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் தேங்கி மிகப்பெரிய அளவிற்கு சுகாதார கேடு ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்




