• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாணவனுக்கு விழா நடத்திய பொதுமக்கள்..,

ByS. SRIDHAR

May 10, 2025

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுனர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் புதுக்கோட்டை வ உ சி நகரில் வசித்து வருகிறார். சந்திரசேகரன் தீபஜோதி தம்பதியின் மகனான பஹிரதன் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பேராங்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி 567 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் இடத்தை பெற்றார்.

மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பகிரதன் தனக்கு தன்னுடைய தகப்பனாரின் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர்கள் கூலி தொழிலாளர்கள் உதவி செய்ததாகவும், இதன் மூலம் தன்னால் 567 மதிப்பெண் எடுக்க முடிந்ததாகவும், தனக்கு உதவி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் மாணவனின் தாய் ஜீவஜோதி மற்றும் சகோதரி ஜனனி வைத்தீஸ்வரி செய்தியாளர்களிடம் தன்னுடைய மகன் மற்றும் சகோதரர் எவ்வாறு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை கவனத்துடன் எழுதினார். அவர் பள்ளிக்கூடத்தின் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அவருடைய வெற்றிக்கு உதவிய ஆட்டோ கூலி தொழிலாளர்கள் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு வ உ சி நகர் பகுதியில் சேர்ந்த பொதுமக்களே விழா எடுத்தனர். ரோஜா பூ மாலை இட்டு கேக் வெட்டி தங்களுடைய பகுதியை சேர்ந்த ஏழை மாணவன் பள்ளிக்கூடத்தின் முதல் மதிப்பெண் எடுத்தமைக்காக அப்பகுதி சேர்ந்த பொதுமக்களும் வெகுவான பாராட்டு தெரிவித்தனர்.