• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூக்கு வழி கொரோனா மருந்தின் விலைப்பட்டியல் வெளியானது

ByA.Tamilselvan

Dec 27, 2022

கொரோனா தொற்றுக்கு எதிரான மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்தின் விலைப்பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது
பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பூசி தனியாருக்கு 800 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 325 ரூபாய்க்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில், மேலும் ஒரு சாதனையாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கான விலைப் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது.
உலகில் முதன்முதலாக மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் உருவாக்கியுள்ளது. அந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பூஸ்டர் டோஸாக போடப்படுகிறது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. மூக்கு வழியாக தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்ளும் பயனாளிகள், அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். தடுப்பு மருந்துக்கான விவரங்கள் கோவின் வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பயனாளிகள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசி 2023 ஐனவரி நான்காவது வாரத்திலிருந்து கிடைக்கும் என்று அறிவித்துள்ளது