• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கையொப்பம் இட்ட புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதி..,

ByM.S.karthik

Aug 23, 2025

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கவேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, ஜனாதிபதி திரெளபதி முர்முக்கு கோரிக்கை கடிதம் எழுதி இருந்தார்.

அதன் அடிப்படையில் SAGA OF RASHTRAPATI BHAVAN, WINGS TO OUR HOPES ஆகிய புத்தகங்களின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளை, ஜனாதிபதி கையொப்பம் இட்டு பள்ளியின் நூலகத்திற்கு வழங்கினார்கள். புத்தகங்களை வழங்கிய ஜனாதிபதிக்கு பள்ளியின் தாளாளர் முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக் நபி, உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், அல்ஹாஜ் முகமது மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே, அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் டி.ஜி.பி சைலேந்திர பாபு, எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் மற்றும் பல முன்னணி எழுத்தாளர்கள் புத்தகங்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.