சோழவந்தானில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் மிகவும் ஆபத்தாக நிலையில் பழுதடைந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த சோழவந்தான் மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


