விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா கண்ணக்குடும்பம்பட்டியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மயான கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் உயிரிழந்தவர்களை திறந்தவெளியில் தகனம் செய்யும் அவல நிலை உள்ளதாக கவலை தெரிவிக்கும் மக்கள் அதனை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.