• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த நபர், பக்கத்தில் வந்த ரயில்… பரபரப்பு வீடியோ

Byவிஷா

Jan 4, 2022

மும்பையில் ரயில் ஓட்டுநர் ஒருவர், தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோவை மத்திய ரயில்வேதுறை அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.


மும்பையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என தெரியவில்லை. ஆனால் ரயில் அருகில் வந்துவிட்ட நிலையில், ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார். உடனடியாக ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினர்.


இந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் விலைமதிப்பற்றது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பலரும் ரயில் ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர்.