கோவையில் மழை நேரத்தில் மயில் ஒன்றி தோகையை விரித்து ஆடும் ரம்யமான காட்சிகள் வைரலாகி வருகிறது.
கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், நகரப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனிடையே காளப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகே, சாரல் மழை ஓய்ந்த நேரத்தில், மயில் ஒன்று தன் இணையை ஈர்க்கும் விதமாக தோகையை விரித்து ஆடிய காட்சியை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
வீடியோ எடுக்கும் நபர் “முருகா திரும்பு” என்று கூறும் நிலையில், மழையில் அவரை நோக்கி அழகாக திரும்பி தோகையை சிலிர்ப்பது காண்போருக்கு சிலிர்ப்பையூட்டுகிறது. தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.