இன்று உலக அளவில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்து வந்த பாதையை நாம் ஆராய்ந்து பார்த்தால் தோல்வியே வெற்றிக்கு அறிகுறி என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் பல்வேறு தோல்விகளைக் கடந்து வந்துள்ளது. அதைப்பற்றி நாம் சுருக்கமாக இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் லிசா 1983-1986 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான இந்த ஆப்பிள் கம்ப்யூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் பெயரை தழுவி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கருவி தோல்வியை தழுவ $10,000 எனும் விலை தான் முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.
முந்தைய ஆப்பிள் கம்ப்யூட்டர் கருவியில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்து கவர்ச்சிகர விளம்பரங்களை பயன்படுத்தியும் ஆப்பிள் ஐஐஐ தோல்வியை மட்டுமே தழுவியது குறிப்பிடத்தக்கது.
மொபைல் போன் சந்தையில் நுழைய மோட்டோரோலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்தது. ஐட்யூன்ஸ்’ இல் இருந்து அதிகபட்சம் 100 பாடல்களை பதிவு செய்யும் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் மேக்கின்டோஷ் $6,500 விலை, 16 பவுண்டு எடை, ஸ்விட்ச் ஆன் ஆவதில் பிரச்சனை என பல்வேறு காரணங்களினால் இந்த கருவி தோல்வியடைந்தது.
ஆப்பிள் பண்டய் பிப்பின் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் கேமிங் கருவி தான் பிப்பின். நின்டென்டோ, சேகா மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் 600 டாலர் விலை போன்ற காரணங்களால் இந்த கருவி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
மேக் ஆப்பிள் இன்க் நிறுவனம் துவங்கி 20 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட விலை உயர்ந்த கருவி எதிர்பார்த்த விற்பனை இல்லாத காரணத்தினால் விலை குறைக்கப்பட்டு அதன் பின் சந்தையில் இருந்து விற்பனை நிறுத்தப்பட்டது.
மொபைல் மீ புகைப்படம், ஃபைல், மின்னஞ்சல், கான்டாக்ட், கேலண்டர் போன்ற அம்சங்களை பயன்படுத்தி கொள்ள ஆப்பிள் நிறுவனம் மொபைல் மீ வெளியிட்டது.
மேக்கின்டோஷ் டிவி 1993 ஆம் ஆண்டு வெளியான மேக்கின்டோஷ் தொலைகாட்சி மற்றும் டிவி என இரு பயன்பாடுகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் தொலைகாட்சி சேவை எதிர்பார்த்த அளவு இல்லாததால் தோல்வியை தழுவியது.
ஐட்யூன்ஸ் பிங் மியூசிக் சேவையின் சமூக வலைதளம் என விளம்பரம் செய்யப்பட்ட ஐட்யூன்ஸ் பிங் மிகப்பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
ஈவேல்டு மேக் பயனாளிகளை ஆன்லைன் மூலம் இணைக்கும் வகையில் 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த சேவை ஆப்பிள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியடைந்தது.