விருதுநகர் மாவட்டம் சிவகாசி வடிவேல் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் மகன், மகள், பத்தாம் வகுப்பு ,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை, பதக்கம் மற்றும் நினைவு பரிசுகளை வடிவேல் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் ஆறுமுகசாமி வடிவேல் வழங்கினார்.

அவர் பேசியது வடிவேல் பட்டாசு தொழிற்சாலை 80 ஆண்டுகளைக் கடந்த பெருமையான நிறுவனம் ஆகும். இந்த பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி தரம் உயரவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் இதுபோன்று ஊக்கத்தொகை பதக்கம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் தொடர்ந்து அவர்கள் கல்வியில் பல்வேறு சாதனைகள் புரிய உதவியாக இருக்கும். மேலும் பள்ளி படிப்பு முடிந்து கல்லூரி படிப்புகளும் இது ஒன்று பல்வேறு சாதனைகள் நிகழ்த்த வேண்டும். அவ்வாறு நிகழ்த்தினால் அவர்களுக்கான கல்வி செலவினை பட்டாசு ஆலையே ஏற்கும் என கூறினார். தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவ மாணவியர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன மேலாளர் தங்கதுரை நன்றி கூறினார்.