கோவை, வெள்ளக்கிணரில் இருந்து துடியலூர் வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் பெண் தூய்மை பணியாளர் ஏறிய போது அதன் ஓட்டுநர் உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்கன்னு கூறியதால் கோபம் அடைந்த பெண் தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் நாங்கள் காசு குடுத்து டிக்கெட் எடுக்கிறோம், தானே எங்களை ஏன் ? அப்படி சொன்னாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வெள்ளக்கிணர் பகுதியில் இன்று மாலை தூய்மை பணிகளை முடித்து விட்டு துடியலூர் செல்ல அவ்வழியாக வந்த 111 என்ற எண் கொண்ட அரசு பேருந்தில் 3 பெண் தூய்மை பணியாளர்கள் ஏறி உள்ளனர். அவர்கள் பேருந்தில் ஏறும் போது அதன் ஓட்டுனர் ஏம்மா ? உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது அதுல ஏறுங்கன்னு கூறி உள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அந்த 3 பெண் தூய்மை பணியாளர்களும் ஓட்டுநரிடம் எப்படி ? எங்களை அப்படி சொல்லலாம் என்றும் நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் எடுக்கின்றோம், தானே எங்களை ஏன் ? ஓசி பஸ்ஸில் வர சொல்கிறாய் என்று கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவருக்கு ஆதரவாக பேசிய நடத்துடனரையும் வெளுத்து வாங்கினர்.
இதனை பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று கூறி சர்ச்சை ஆன நிலையில். தற்போது கோவையில் அரசு பேருந்து ஓட்டுநர் இவ்வாறு கூறி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











; ?>)
; ?>)
; ?>)