• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இணையத்தை கலக்கும் ஆதிபராசக்தியின் அடுத்த அவதாரம்

லேட்டஸ்டாக, திடீர் பெண் சாமியார் அவதார வீடியோக்களால் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்திருப்பவர் அன்னபூரணி. ’அன்னபூரணி அரசு அம்மா’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு பொதுமக்கள் பக்தி பரவசத்தில் கதறி பூஜை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அதேநேரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் தனிப்பட்ட பிரச்சனைக்காக கலந்துகொண்டுள்ளார் அன்னபூரணி. அந்த வீடியோக்களும் ஒருபக்கம் வைரலாகி விமர்சனத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.


கொரோனா உருமாறி வருவது போல திடீரென்று சாமியார்களும் உருவாகி மக்களை ஏமாற்றி வருகின்றனர். மன்னாதி மன்னர்கள் கட்டிய கோவிலுக்குள் இல்லாத தெய்வமா இவர்களிடத்தில் இருக்க போகிறது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.