• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வங்கி மேலாளரிடமே கைவரிசை காட்டிய மர்ம கும்பல்..!

Byவிஷா

Oct 28, 2023

சென்னையில் வங்கி மேலாளரே சைபர் மோசடியில் சிக்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வங்கி மேலாளரை அணுகலாம். அந்த மேனேஜருக்கு பிரச்சனை என்றால்? என கேட்கும் அளவுக்கு சென்னையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கிருபாகரன் என்பவர் அண்ணா நகரில் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரை தொடர்பு கொண்ட கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி என்னை கேட்டுள்ளனர். மோசடி நபர்கள் என அறியாத கிருபாகரன் உடனே ஓடிபி கூறியதும் 1.30 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். வங்கி மேலாளரே சைபர் மோசடியில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.