திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு தாலுகா மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளி மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்வது வழக்கம்.இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்டார்.

இந்த நிலையில் அறிவிக்கப் படாத மின்வெட்டு காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சார வசதி இல்லாததால் செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் அவலம் ஏற்பட்டது. தொடர்ந்து மின்சார வசதி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவருக்கு செல்போன் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கப்பட்ட சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.