சிவகாசியில் விருதுநகர் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு கோப்பைக்காண ஆண்கள் ஹாக்கிப் போட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட அணிகளைச் சார்ந்த சுமார் 600- விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ள போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடத்தப்படுகிறது. 12- வயதிற்குட்பட்டவர் பிரிவில் ஒரு அணிக்கு 7- நபர்களும், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஒவ்வொரு அணிக்கு 5- பேர்களும் பங்கேற்று விளையாடு கின்றனர்.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு ஹாக்கி விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.