• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம் ….

ByNamakkal Anjaneyar

Mar 6, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் அகரம் கிராமத்தில் வேலங்காடு அத்திமரபட்டி கிராம சாலை குண்டு குளியுமாக இருப்பதை சரி செய்ய வலியுறுத்தி நடைபயணப் பிரச்சார இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.

அகரம் கிராமம் வேலங்காடு அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்லக்கூடிய தார் சாலை கடந்த 10 வருடங்களாக குண்டும் குழியுமாக மாறிவிட்டது இவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் வயதானவர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் கீழே விழுந்து கை கால்கள் இழப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வரும்போது உரிய நேரத்தில் வர முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் இப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கவனத்திற்கு கொண்டு சென்று சாலை அமைக்கப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷிடம் தகவல் தெரிவித்தனர் பின்னர் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பினர் பி.கிட்டுசாமி தலைமையில்,

முருகன் கோவில் இருந்து பிரசார பயணம் தொடங்கியது அப்போது தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலை அமைப்பதற்கான முன்னுரிமை வழங்குகிறோம் என கூறினார்கள் இதனை எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறியதால் இக்கோரிக்கை ஏற்றுகொண்டததன் பேரில் நடைபெற இருந்த நடை பயண பிரச்சாரம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம். அகரம் வார்டு உறுப்பினர் த.பூங்கொடி. ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து.ஆர். ரமேஷ். ஆர்.ஈஸ்வரன்.பாலகிருஷ்ணன் உட்பட கிராம மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.