• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரியில் கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது..!

குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வன சாகரத்தில் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த கருங்குரங்கின் வாலைப் பிடித்து இழுத்து தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம் பூதப்பாண்டி வன சாகரத்தில், கன்னிமாரா ஓடை என்ற பகுதி உள்ளது. குமரி வனப் பகுதியில் பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. குறிப்பாக பல வகையான குரங்கு இனங்கள் அதிகமாக உள்ளன. வனப்பகுதியில் பல இடங்களில் நீர் ஓடைகள் உடன் பசுமை படர்ந்த இந்த இடத்தில் உள்ள பசுமையான பகுதிகளை காண சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு தினம் வருவது வாடிக்கை. இந்த பகுதியில் இருந்த ஆலமரம் ஒன்றின் கிளையில் கருங்குரங்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதன் வால் நீளமாக தரைப்பகுதியை நோக்கி இருந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள அண்ணாநகரை சேர்ந்த தொழிலாளி ரஞ்சித் குமார் (42)அவரது நண்பரும் அந்த வனப்பகுதிக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள். இரு சக்கர வாகனத்தை ஆலமரத்தின் நிழலில் வைத்த போது அவர்கள் தலைமேல் ஆலமரத்தில் இருந்த குரங்கின் வால் நீளமாக தொங்கியதை பார்த்த ரஞ்சித் குமார் அதன் வாலை பிடித்து இழுக்க அதனை அவருடன் வந்த நபர் செல்லில் படம் பிடித்தது மட்டும் அல்ல அதனை சமுக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் இந்த வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது.
கருங்குரங்கு பாதுகாப்பு பட்டியலில் உள்ள நிலையில், கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தல் செய்த நபர் குறித்து. குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா, கருங்குரங்கின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்தல் செய்த ரஞ்சித் குமரை கைது செய்ய உத்தரவிட்டார்.

   வன அலுவலர் உத்தரவை அடுத்து குமரி மாவட்ட உதவி வனபாதுகாவலர் சிவகுமார் மேற்பார்வையில், பூதப்பாண்டி வன சரகர் மணிகண்டன் வனகுழுவினர்கள் நேற்று (டிசம்பர் - 13)ம் ரஞ்சித் குமார் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.

வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.