சென்னை ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கதவு அருகே சிறுமி ஒருவர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார்.
இதைக் கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுமியின் பெயர் ஷ்ரிஷா வயது 16 தெலுங்கானாவை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு கடையில் தன்னை வேலை பார்க்க அழைத்து வந்ததாகவும் முறையாக உணவு தராததால் அங்கிருந்து தப்பித்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறினார்.

பெண் வேலை பார்க்கும் கடை ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு அவரிடம் சிறுமியை ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.