• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மத்திய பாஜக அரசின் பாரபட்சமான மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் சாலை மறியல்

ByG.Suresh

Aug 2, 2024

தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பழிவாங்கும் நோக்குடன் நடப்பு பட்ஜெட்டில் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்த ஒடிசா, பீகார்,ஆந்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாரபட்சத்துடன் நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.