• Fri. Apr 26th, 2024

கிருஷ்ணா நதிநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியது; மாசை தடுக்க ஆர்வலர்கள் கோரிக்கை…

By

Sep 2, 2021 ,

1990 ஆம் ஆண்டு தெலுங்கு – கங்கை திட்டப்படி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரும் வகையில், கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் வழியாக வரும் தண்ணீரை பூண்டி ஏரியில் சேமித்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு அனுப்பி, அங்கிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருகிறது.

மேலும் ,தமிழக- ஆந்திர அரசுகள் இணைந்து, 1983-இல் கொண்டு வந்த கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 8 டி.எம்.சி. தண்ணீரும், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரபாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரை சுத்திகரித்து சென்னை மாநகர பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதோடு, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் பூண்டியில் இருந்து செம்பரபாக்கம் ஏரிக்கு வரும் கிருஷ்ணா கால்வாயில், தண்டலம், மேவலுர்குப்பம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் இரு இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கால்வாயில் விடப்படுகிறது.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் உள்ள சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீர் சவுத்ரி கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் சென்று கலக்கிறது தெரிவித்தனர். மேலும், தொழில் பூங்காவில் இருந்து செல்லும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வரத்து கால்வாய் மூலமாக செம்பரம்பாக்கம் ஏரியில் விடப்படுகிறது.

இதனால் செம்பரபாக்கம் ஏரிநீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு மற்றும் தொழிற்சாலைகளில் இருக்கக்கூடிய கெமிக்கல் நிறைந்த கழிவு நீரை லாரிகளில் கொண்டுவந்து செம்பரம்பாக்கம் செல்லும் நீர் வரத்து கால்வாயில் கொட்டி விடுவதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்து கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *