வடமாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வரும் வடமாநில இளைஞர்கள் ரவுடிசம் தற்போது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, வடமாநில ரவுடிகள் சிலர் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் ஏறிக்கொண்டு அங்கு இருந்த பயணிகளுக்கு தொந்தரவு செய்தனர்.

டி டி ஆரிடம் புகார் செய்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நேற்று கோவையில் தமிழ் காவலாளியை கும்பலாக தாக்கி உள்ளனர் .இது பற்றி ஷாலினி என்பவர் கூறுகையில் ” கடந்த காலங்களில் இவர்கள் (வட மாநிலத்தவர்) முன்பதிவு செய்யாத ரயில் பெட்டிகளில் கும்பலாக ஏறிக்கொண்டு ரவுடித்தனம் செய்தனர் (டிக்கெட் கூட எடுப்பதில்லை) தற்போது முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் கும்பலாக ஏறிக்கொண்டு ரவுடித்தனம் செய்கின்றனர்.

இவர்களின் ரவுடிசத்தை தடுக்காவிட்டால் வரும் காலங்களில் தமிழக சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விடும், எனவே தமிழக அரசு இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள்,மற்றும் ரயில் பயணிகள் சார்பில் கோரிக்கை விடுவதாக கூறினார்.