திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற(சாந்தி) அல்வா கடையில் தேள் இருந்ததாக கூறி வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார்.

புகார் எதிரொலியாக திருநெல்வேலியில் உள்ள பிரசித்தி பெற்ற அல்வா கடையின் கடை மற்றும் குடோனில் திருநெல்வேலி மாவட்டத்தின் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
மேலும் விளக்கம் கேட்டு கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும் நிறுவனம் சார்பாக இது போன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்பே இல்லை என முன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு நடத்தப்பட்ட ஆய்வு என்பது பல்வேறு குறைபாடுகள் இருந்ததை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிந்தனர். அந்த குறைபாடுகள் தொடர்பாகவும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அந்த குறைபாடுகளை சரி செய்து விட்டு மீண்டும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சரி செய்யப்பட்டது. தொடர்பாக ஆவணங்களை புகைப்படத்தோடுவழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் பிறகும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக அந்த குடலில் ஆய்வை மேற்கொள்வார்கள் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.