மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில் வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பல்வேறு காரணங்களை கூறி தகுதி நீக்கம் செய்த உத்தரவிட்டது.
சகுந்தலா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சூழலில், தமிழ்நாடு அரசின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆணையை நகராட்சி ஆணையாளர் இளவரசனிடம் வழங்கி கடந்த 4 ஆம் தேதி மீண்டும் நகர் மன்ற தலைவராக பதவியேற்க வந்த சகுந்தலாவை பதவியேற்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நகர் மன்ற தலைவர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சகுந்தலாவிடம் உயர் அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்று அதன் பின் அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பதவியேற்க நகராட்சிக்கு அதிமுக நகர் மன்ற உறுப்பினர்களுடன் சகுந்தலா நகர் மன்ற தலைவராக பதவியேற்க அனுமதி கோரிய சூழலில், இன்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் மேலிட உத்தரவு இன்னும் வரவில்லை வந்த பின் தான் அனுமதி அளிக்க முடியும் என கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும்., இதனால் விரக்தியடைந்த சகுந்தலா, எப்போது பதிவியேற்பது என்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காத நகராட்சி நிர்வாகத்தை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.