• Sun. Nov 23rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய விவகாரம்..,

ByP.Thangapandi

Jun 19, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாஜக மதுரை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகிகள், கடந்த 17ஆம் தேதி குளத்துப்பட்டி கிராமத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 மாணவிகள், 2 மாணவர்களை நிர்வாணப்படுத்தி, புகைப்படம் எடுத்ததாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியான ரவி என்ற குற்றவாளியை விரைவில் கைது செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரனிடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம், இந்த விவகாரம் தொடர்பாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுரையின்படி டிஎஸ்பி-யை சந்தித்தோம், காவல்துறை தேடிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் பெரிதாக மாறியுள்ளது. அதே போன்று பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. வட தமிழகத்தில் மூதாட்டியை, அண்ணா பல்கலைக்கழக மாணவி என தினமும் பத்திரிக்கைகளில் செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிக அதிகமாக நடக்கிறது. அதே மாதிரி போதை கலாச்சாரம் திமுக நிர்வாகியே போதை பொருள் கடத்திலில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்க கூடாது என கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

இந்த குளத்துப்பட்டி விவகாரத்தில் உடனடியாக காவல்துறையினர் கைது நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி கூறியுள்ளனர். அவரை கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாஜக உசிலம்பட்டி தொகுதி சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு முதல்வர் கையில் உள்ள துறை காவல்துறை, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உசிலம்பட்டியில் கஞ்சா போதையில் காவலரை கல்லால் தாக்கி படுகொலை செய்தனர். தமிழகத்தில், குறிப்பாக உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக இருக்கிறது. இதற்கு முதலவர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.