• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஈரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம்..,
வெடிக்கும் மக்கள் போராட்டம்..!

Byவிஷா

Mar 9, 2023

ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, அங்கு போராட்டம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஈரான் தலைநகரில் டெஹ்ரான் அடுத்த கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாந்தி, வயிற்று வலி, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணங்களால் மாணவிகள் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் மாணவிகள் உடலில் நஞ்சு கலந்திருந்தது தெரிய வந்தது.
இதனால் அந்த விவகாரம் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த மாதத்தின் இறுதியில் இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்தார்.
மாணவிகள் பள்ளியில் சென்று படிப்பதை தடுப்பதற்காகவே மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து வரும் அவலம் இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஈரானில் 10 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 10 மாகாணங்களில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளை குறிவைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பள்ளிக்கூடங்களின் முன்பாக மாணவிகளின் பெற்றோர் பதற்றத்துடன் கூடி நின்று போராடி வருகின்றனர். பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. மாணவிகளுடன் பெற்றோரும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இது குறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இந்த சம்பவம் ஒரு வெளிநாட்டு சதி இதன் மூலம் நமது எதிரிகள் பெற்றோர்கள் மாணவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பு உண்மையையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.