• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுகவினர் தத்தெடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

ByP.Thangapandi

Mar 16, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம். தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சீரமைக்க தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த சூழலில்., முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுகவினர் தாமாக முன்வந்து இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தத்தெடுத்து சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலைய சுவர்களில் உள்ள விரிசல்களை சரிசெய்து வர்ணம் பூசுதல் மற்றும் சுகாதார வளாகத்தில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிகளின் போது சேடபட்டி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜெயச்சந்திரன், உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் இணைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.