• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

மனைவின் நினைவாக கோவில் கட்டிய கணவர்

Byமதி

Sep 28, 2021

காதல் மனைவி மேல் கொண்ட அன்பால் ஷாஜகான் உருவாக்கிய தாஜ்மஹால் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது அன்பு மனைவி மறைவுக்கு பின் மத்திய பிரதேசத்தில் நினைவுச் சின்னம் அமைத்து அவர் வழிபட்டு வருகிறார் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபுர் மாவட்டத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய்.

கொரோனா 2-வது அலையின் போது அவரது மனைவி கீதாபாய் இறந்துள்ளார். மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், அவரது உருவிலான சிலை நிறுவி நாள்தோறும் வழிபட்டு வருகிறார்.

கோவிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தனர். இப்போது, அவர்கள் தினமும் சிலையை வணங்குகிறார்கள். அவர்கள் வழக்கமாக மாலையில் சடங்குகளைச் செய்கிறார்கள். ரத்தோரின் மூத்த மகன் லக்கி, அவர்களின் தாய் தங்களைச் சுற்றி இருக்கிறார் என்ற உணர்வைத் தருகிறது என கூறி உள்ளார்.