• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காவல்துறையினரின் மாபெரும் இரத்ததான முகாம்..!

ByKalamegam Viswanathan

Nov 11, 2023

மதுரை மாநகர காவல்துறை மற்றும் மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாமை இன்று காலை 11.00 மணிக்கு மதுரை மாநகர ஆயுதப் படையில் அமைந்துள்ள அரசு காவலர் மருத்துவமனையில் மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., துவக்கிவைத்து ரத்த தானம் வழங்கினார்.
இந்த இரத்த தான முகாமில் காவல் துணை ஆணையர் (தெற்கு) பிரதீப் ஐ.பி.எஸ்., காவல் துணை ஆணையர் (வடக்கு) . புக்யா சினேக பிரியா ஐ.பி.எஸ்., காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) குமார் ஐ.பி.எஸ்., காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), மங்களேஸ்வரன், மாநகர காவல் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையாளர்கள் உட்பட சுமார் 210 நபர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் அளித்தனர்.