ஒவ்வொரு ஆண்டும் தமிழக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மதுரை மாவட்டம் திருவள்ளுவர் நகர் புனித சார்லஸ் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் ஜான்சி பாலின்மேரி க்கும் வழங்கப்பட்டுள்ளது. அவ்விருதை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை அண்ணா சாலை நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.