கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கூத்தரிச்சிக்காரத் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று பள்ளிக்கு பெற்றோர்களுடன் வந்த மாணவிகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு வாசல் வரை வந்து காலை வணக்கம் தெரிவித்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். முதல் நாள் என்பதால் மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
