• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புகைப்பட கண்காட்சி துவங்கி வைத்த ஆட்சித் தலைவர்..,

ByG. Anbalagan

May 10, 2025

கோடை விழாவை முன்னிட்டு உதகையில் துவங்கியது புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பின் வெற்றி துவக்கி வைத்தார் .

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நடத்தப்படுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருள்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் வனத்துறையினர் சார்பில் புகைப்பட கண்காட்சி இன்று துவங்கியது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரும் மற்றும் மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர் பார்வையிட்டு துவக்கி வைத்தனர். இதில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.