• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

Byவிஷா

Mar 9, 2023

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இரண்டாவது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்ததையடுத்து, தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்து செப்டம்பர் 26, 2022-ல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அக்டோபர் 3, 2022-ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 19-ம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்ட மசோதா அக்டோபர் 28-ம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கோரி தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. அதற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது காலாவதியானது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்த ஆளுநர், இந்த சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அது தொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியிருந்தார். இதற்கு தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருந்ததாக தமிழக சட்டத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக ஆளுநரிடம் கடந்த 4 மாதங்களாக பரிசீலனையில் இருந்த நிலையில், மார்ச் 08-ம் தேதி இரண்டாவது முறையாக அந்த சட்ட மசோதாவில் சில விளக்கங்களைக் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, 2வது முறையாக கடந்த அக்.19ந் தேதி தமிழ்நாடு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் வைத்திருந்த ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.