• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

செந்தில் பாலாஜி அனிதா மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை..,,

ByKalamegam Viswanathan

Jun 20, 2026

தமிழக முதல்வர் விஜய் 52 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

சோலார் மற்றும் மின்சாரத்திலும் அதிகமான முதலீடு செய்துள்ளனர் கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டிலும் மிகப்பெரிய விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது.

சோலாரில் அப்ளிகேஷன் கொடுக்க வேண்டும் என்றால் தனிநபர் மூலமாக தான் கொடுக்க வேண்டியதாக உள்ளது அவர் மெகாவாட்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் தான் அப்ளிகேஷனை உள்ளே செல்லும்.

தவெக காட்சி வந்தவுடன் முதல்வர் ஆலோசனையுடன் இதுபோன்ற லாபிகள் உடைக்கப்படுகிறது ஒளிவு மறைவு இல்லாத திட்டத்தை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

யார் எல்லாம் இந்த முறை கேடுகளில் இருந்தனர் என்றும்‌ இதில் திருநெல்வேலி உடுமலைப்பேட்டை சென்டர்களில் புரோக்கர்கள் ஆப்பரேட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஐந்து மண்டலமாக பிரித்து விரைவாக கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெரிய முறைகேடு செய்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இன்னும் பத்து நாட்களில் ஒளிவு மறைவு இல்லாத (டிரான்ஸ்பரென்ட் போர்டல்) உருவாக்கப்பட உள்ளது.

மின்சாரத்துறை சார்பாக வரும் வாரம் இறுதிக்குள் வெளியிடப்படும், தொகுதி நிலைமை என்ன எந்த நிலையில் உள்ளது. எந்தெந்த முறையில் துறைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது வெளியிடப்படும். சோலாரில் முறைகேடு நடந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் காவல்துறையினர் குவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ?

செந்தில் பாலாஜி பல வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார். பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. எந்த வழக்கு என்று தெரியவில்லை.

மின்வாரியத் துறையில் பணியிடம் ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் குறித்த கேள்விக்கு ?

இந்த வருடம் 15 ஆயிரம் பேர் மின்வாரியத்துறையில் வேலைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் துறையில் முழுமையாக சீரமைக்க வேண்டும்.

குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன குறிப்பாக அவனியாபுரம் பகுதியிலே கொலைகள் நடைபெறுவது குறித்த கேள்வி ?

எங்கெல்லாம் குற்ற சம்பவங்கள் நடக்கிறதோ அங்கு கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. கடந்த அரசாங்கம் பாலியல் குற்றங்களை மூடி மறைக்கும் விஷயங்களை செய்தது. இப்போது விசாரணையில் எந்த ஒரு தவறும் இல்லை .போதை பொருட்களைகட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 52 இடங்களுக்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது எதற்காக தடைபடுகிறது என்பது குறித்து மின்சார துறை சார்பாக அறிக்கை வெளியிடப்படுகிறது.
டிரான்ஸ்பார்ம் ஆயில் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ?

டிரான்ஸ்பாரம் மெயின்டனன்ஸ் டெண்டர் நிறுத்தப்படவில்லை.மதிப்பீடு செய்வதில் தவறு உள்ளது. சீரமைத்த பின்பு புதிய டெண்டர் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு இழப்பீடு இல்லாத வகையில் மதிப்பீடு செய்து டெண்டர் விடப்படும்.

டிரான்ஸ்பார்ம் ஊழல் சிபிஐ விரைவாக முடிக்க வேண்டும் அதுதான் வேண்டுகோள் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அரசு பணத்தை திருடியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய அரசு திமுகவுடன் இணைந்து செயல்படுகிறது என்பதற்கு உதாரணம் செந்தில் பாலாஜி அனிதா கிருஷ்ணன் மேல் நடவடிக்கை எடுக்காத குறித்த கேள்வி ?

ஒன்றிய அரசு, திமுகவுடன் இணக்கமாக இருப்பதால் இதுவரை கவர்னருக்கு அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடி (ED) கேட்டதின் அடிப்படையில் அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது இதுவரைக்கும் கவர்னர் அலுவலகத்திலிருந்து ஒப்புதல் வழங்கவில்லை.

சிபிஐயும் திமுகவும் இணைந்து செயல்படுகிறார்களா மறைமுகமாக செயல்படுகிறார்களா.? செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழங்கிய கோப்புக்கு எந்த ஒரு ஒப்புதலும் கவர்னர் வழங்கவில்லை.